கவிஞர். இறைநேசன்

கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday 26 October 2019

மாறும் வேஷங்கள் !

October 26, 2019 0
மாறும் வேஷங்கள் !

வேஷம் போடும் உறவு
மோசம் செய்ய எண்ணம்

காரியம் முடியும் வரை நமது
கால்களை சுற்றும் போலிகள்

நடிப்பை மிஞ்சும் கலைஞர்கள்
நல்லவராக முன் நிற்பவர்கள்

நம்மை அறிந்தே வழிகெடுத்து
நம்ப வைத்து குழிபறிக்கும்

வேஷம் போட்டு காசு பார்க்க
பாசமென சொல்லி கொள்ளும்

தேவையறிந்து கண்ணீர் விடும்
வேலை முடிந்திட விலகி ஒடும்

வேஷங்களை மாற்றும் முகங்கள்
வேதனக்கு வித்திடும் குணங்கள்

இறைவனை அஞ்சாத மனங்கள்
இருப்பதை கறக்கும் இனங்கள்

சொந்த புத்தி நாமே சிந்திக்கனும்
சுயமாக நாமே முடிவு எடுக்கனும்

வாங்கி உண்டவர் இன்றில்லை
வளமானது தன் வாழ்வு நிலை

கொடுப்பதை நிறுத்திப்பார்
தெரியும் உறவின் பாசகணக்கு

உன் மனைவி உன் மக்கள் இது
உன் வாழ்கையை கற்றுக்கொள்

கண் முன்னே கோடி காட்சி இது
வேசம் மாற்றும் உறவு சாட்சி !

கவிஞர்: இறைநேசன்.
Read More

சீரழிவு !

October 26, 2019 0
சீரழிவு !

மேற்கத்திய கலாச்சாரம் நம்
மங்கையற்களை மாற்றியது

தலை முதல் கால் வரை இது
அரை குறை ஆன உடை

ஆடையில் அரை குறையாக
நாகரீக மங்கைகள் இன்று

அங்கங்களை மறைத்து வாழ்ந்த
நம் முன்னோர்கள்

இன்று அங்கங்களை மறைக்க
தெரியாத பெண் நங்கைகள்

இயற்கை தந்த அழகை இனி
செயற்கையாக்கி 

அழகு நிலையம் செல்வது 
பேசிங் முதல் வாசிங் வரை

இயற்கையை தொலைத்து
செயற்கை அழகோடு வலம்

பாலியல் குற்றங்களுக்கு 
பாதையையாக அமைகிறது

முக நூலில் அறிமுகம் இனி
யுகமாய் முடியும் மரணங்கள்

அந்தரங்கங்களை தந்திரமாக
தாமே அறியாது படம் பிடித்து

லகரங்களை கேட்டு மிரட்டும்
இன்றைய போலி காதலர்கள்

கண்ணியமான குடும்பம்
பார்த்து வளர்த்த பெற்றோர்

குடும்ப பாரம்பரியம் மறந்து
புதிய ஈர்ப்புகள் மாற்றும் 

சீரழிக்கப்பட்ட நிலையில்
அஸ்தமனமான வாழ்க்கை

இந்த மேற்கத்திய மோகம்
தரும் சீரழிவின் தாக்கம் !!

கவிஞர்: இறைநேசன்.
Read More

சிகரம் தொடு !

October 26, 2019 0
சிகரம் தொடு !

நீ ! கடந்து வந்த பாதை
நடந்து வந்த தூரம்

கற்களும் , முட்களும்
காயத்தின் தழும்புகள்

நடைகளின் தாக்கம்
வெற்றியின் இலக்கு

ஏதிர்கால எதிர்பார்பு
நிகழ்கால சிந்தனைகள்

முயற்சி , தன்நம்பிக்கை
கற்று தந்தது பாடங்கள்

ஆசைகள் மனதில் கோடி
அக்கரை ஒன்றே வெற்றி

சாதிக்க வேண்டி துடிப்பு
சாதிப்போம் நம்பிக்கை

தூரம் அதிகமில்லை இனி
நீ ! சிகரம் தொட ......

கவிஞர்: இறைநேசன்.
Read More

துணைவி !

October 26, 2019 0
துணைவி !

நம் வாழ்க்கை துணைவி
இறைவனின் பொருத்தம்

நாம் விரும்பி மண முடித்தது
நம்மை தேடி வந்து அமைந்தது

இரண்டுமே நம்மால் முடிந்ததா
ஏற்கனவே முடிவு செய்யபட்டது

இன்னாருக்கு இன்னார்தான்
மாற்ற முடியாத விதி

திருமணம் என்ற பந்தத்தில்
ஜோடியாக இணைந்து

வாழ்க்கை என்ற பாடங்கள்
கற்று கொள்ள வந்த பந்தம்

பெற்றவர்கள் , உற்றவர்களை
பிரிந்து உன் கரம் பிடித்தவள்

வாழ்க்கையில் எல்லாமே
நீ ! தான் என்று உறவாகி

இன்பம் , துன்பங்களை
இருவருமே பங்கெடுத்து

விட்டு கொடுத்தல் ஒன்றே
இனி சுமூகமான பயணம்

கருத்து வேறுபாடு கடந்து
இணைந்து கரம் பிடித்து

வாரிசுகளை சுமந்து இனி
வாழ்வை வளமாக்கி

இன்னாரின் துணைவி என்ற
அடக்கத்துடன் ஆனந்தமாய்

கணவன் இறுதி நாள் வரை
மிகவும் உறுதியாக

வாழ்க்கையில் அவனுடன்
ஓரு நல்ல "துணைவி"யாக

கவிஞர்: இறைநேசன்.
Read More

அம்மா !

October 26, 2019 0
அம்மா !

அன்பு இங்கே உதயமானது
தொப்புள் கொடி உறவாய்

பாசங்களை பிரித்தரியாத
நேசம் கொண்ட மனம்

இருப்பதை பகிர்ந்து தந்து
சந்தோஷத்தை ரசித்தவள்

ஈரைந்து மாத இன்னல்கள்
அவளுக்கு சுமையல்ல சுகம்

மரண வலியை தாண்டி ஒரு
உயிர் அவளுள் பிறந்தது

அம்மா மடி மீது வருடல்கள்
எனக்கு ஒரு வசந்தகாலம்

அம்மா தான் எனக்கு அகரம்
இன்று நான் சிகரம் தொட

அம்மா !
என் அன்பை சுமந்த உள்ளம்
உறுதியாக ! இறுதி வரை !!

கவிஞர்: இறைநேசன்.
Read More

இது ஒரு காதல் கதை !

October 26, 2019 0
ஓரு காதல் கதை !

மீண்டும் ஓரு காதல் கதை
இது மனங்களை கடந்து

காதல் மீண்டு வருமா
இந்த மோகத்தில் இருந்து

காதலுக்கு கண்ணில்லை
இது கடந்த காலம்

காதலின் "பண-பலம்" இதை
ஆராய்வது நிகழ் காலம்

வளரத்த பெற்றோரை காதல்
ஒரு கணம் மறக்க சொல்லும்

காதலித்தவனை மட்டுமே
மனம் நினைக்க எண்ணும்

நல்லவனா , கெட்டவனா
அறிய அவசியமில்லை

காதலி முடிவெடுப்பாள்
இவன்தான் உலகமே என

காதல் மயக்கம் இவளை
நம்ப வைக்கும் நின்று

வாழ்க்கை தலை விதி
இனி வாழனும் நிமிர்ந்து

இழந்த பின் எதுவுமே
திரும்பாது உன்னிடம்

வாழ்க்கையில் வசந்தம்
வருவது ஒரு முறை

வாழ்க்கை வாழ்ந்து பார்
இந்த காதல் இல்லாது ....

சுகமாய் கடந்து
சுபமாய் முடியும் !

கவிஞர்:இறைநேசன்.
Read More

சங்கமம் !

October 26, 2019 0
சங்கமம் !

முக்கடல் சங்கமிக்கும்
இந்த "கன்னியாகுமரி"

ஆதவன் உதயம் இங்கே
அழகிய ஒளி சிதறல்கள்

அந்தி மாலை பொழுதின்
அஸ்தமனமாகும் சாட்சி

சுற்றுலா தளங்களில் இது
பாரம்பரிய மிக்க பெறுமை

கரைகளை தாலட்டும் இந்த
அலைகளின் ஒசை

பாறைகளில் நுரை ததும்பும்
கண் கொள்ளா காட்சி

கட்டு மரஙகள் உயர்தெழுந்து
இந்த கடல் மீது பயணம்

நெஞ்சில் உரம் ஏறிய மீனவன்
நிமிர்ந்து நிற்கும் வீரம்

கண் கண்ட தூரம் வரை இனி
கடல் அண்னை ஆட்சி
212
தரை தட்டும் கரை வரை இனி
கப்பல்கள் அணிவகுப்பு

விவேகானந்தர் தியானித்த
பாறை மீது மணிமண்டபம்

வள்ளுவப் பெருந்தகைக்கு
வான் உயர சிலை கம்பீரமாய்

ஆர்பரிக்கும அலைகள் இதில்
இதமான படகு பயணம்

கடல் சிற்பி கைவிணகள்
கலை நயமிக்க ஆக்கங்கள்

முக்கடல் சங்கமிக்கும் இங்கே
குமரியின் ஒர் அடையாளம் !

கவிஞர்: இறைநேசன்.
Read More

Sunday 23 June 2019

என் தந்தை !

June 23, 2019 0
மனைவி கருவுற்ற போது அவர்
கண்டது மகிழ்ச்சியின் உச்சம்
என் வளர்ச்சி பரிமாணம் அவரில்
வாரிசு தைரியத்தை தந்தது
மண்ணில் பிறந்த நான் அவருக்கு 
தந்தை அந்தஸ்தை கொடுத்தேன் 
என் கை பிடித்து அன்று என்னுடன் 
அவரும் நடை பழகினார்

என் சுட்டி சேட்டைகளை இன்னும்
ரசிப்பதில் எத்தனை பெருமை
இன்னும் அறிவுக்கு முதல் எழுத்தை
அறிமுகம் செய்து வைத்தவர்

அவர் தோள்களுக்கு நான் என்றும்
சுமை அல்ல ! சுகம்தான் !!
தளராத அவரின் உழைப்பு அன்று
என் எதிர்காலம் எண்ணி மட்டுமே
அவர் கற்று தந்தது மந்திரம் அல்ல
வாழ்கையின் பாதைகளை காட்டி

அப்பா என்றால் அன்பு என்பது
நான் அவரிடம் கண்ட உண்மை
எனக்காக மட்டுமே கனத்தது
மனது சிகரம் தொட வேண்டி
இன்று
வளைந்த தேகமும் !
வளையாத பாசமும் !!
என் அப்பா !
எனக்கு ஒரு பிதா மகன் !
Read More

Wednesday 15 August 2018

சுதந்திரதினம்

August 15, 2018 0

சுதந்திரதினம் !

வெள்ளையனிடம் மண்டி இட்டு
வேர்வையை சிந்திய காலம்

கொள்ளையாய் அடிமையாக
அன்று கூனி குறுகிய நேரம்

போராட்டம் , சிறைகள் இது
அனுபவித்த துயர சம்பவம்

உண்மை பேசினால் வன்மை
ஏன் ? என்று கேட்டால் அடிமை

சொந்த மண்ணில் கூட அன்று
நிமிர்ந்து நடக்க முடியவில்லை

தியாகிகள் பலர் ஏற்று கொண்டு
கடந்த வந்த துன்பங்கள் கோடி

சுதந்திர வேட்கை ஒன்றே மூலதனம்
சிந்தியது மணித்துளியாய் உதிரம்

வெள்ளையனை மண்ணை விட்டு
இறுதியாய் ஒரு நாள் விரட்டபட்டு

தேச தந்தைகளால் வீறு கொண்டு
அடியோடு முழுமை பெற்ற

இந்த சுதந்திரத்தை பேணி காத்து
நினைவு கொள்ளும் இத்தருணம்

பிளவு வேண்டாம் ஜாதி கொண்டு
ஒற்றுமையோடு உயர்வோம் நின்று

தலை வணக்குவோம் நம் தேசத்திற்கு
மரியாதை செய்வோம் தியாகிகளுக்கு

கவிஞர்: இறைநேசன்

Read More